இரட்டிப்பு அதி சக்தியாக மாறும் சிட்ராங் புயல்!! தமிழகத்திற்கு எச்சரிக்கை?
மாறும்அந்தமான் கடலில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து சிட்ராங் புயலாக உருமாறி வங்காள விரிகுடாவில் தற்பொழுது உள்ளது.
இந்த சிட்ராங் புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் தற்போதைய விட அதிக அளவு தாக்கம் கொண்ட புயலாக மாறும் என கூறுகின்றனர். அவ்வாறு அதிக தாக்கம் கொண்ட இந்த புயல் நாளை வங்கதேச பகுதியை கடக்கும் என கூறியுள்ளனர்.
அவ்வாறு வங்காள தேசத்தை கடக்கும் வேளையில் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.