தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை மையம் அறிவிப்பு

0
196
Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை மையம் அறிவிப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,ஜூலை 1 இல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஜூலை 2 இல் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இதனால் இந்த குறிப்பிட்ட நாட்களில் (ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை) குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளுக்கும், லட்சத்தீவு பகுதி, கர்நாடகா- கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.