தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!

0
157

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் 10 மாவட்டங்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் எடுத்துள்ளது.

வருகின்ற செவ்வாய்க்கிழமை டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மீதமானது முதல் கனமழையும் தமிழகத்தின் கீழ்க்கண்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 21ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் உள் தமிழகத்தில் நாகை தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை பெரம்பலூர் அரியலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புறநகர் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை இன்று காற்றின் வேகம் 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரையிழும் சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வரையிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளையும் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.