தமிழகத்தில் கோடையிலும் கன மழை : இதனால் நிபுணர்கள் சொன்னபடி கொரோனா தாக்கம் அதிகரிக்குமா?

0
127

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் பல இடங்களில் வெய்யில் கடுமையாக வாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கடும் வெய்யிலால் வற்ற தொடங்கிவிட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்லும் மக்கள் கோடை வெயிலை தாங்கமுடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் பணியில் உள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வியாபாரிகள், பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரும் வெய்யிலால் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதற்கிடையில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலர் இந்த கோடை காலத்தால் தான் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கிறது. மேலும் நாட்டில் மழைக்காலம் தொடங்கினால் இந்த நோய் தொற்று ஈரப்பதத்தின் காரணமாக அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் வட கிழக்கு மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், அரியலூர், நாகை பகுதிகளில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் அதிகம் மழை காணாத இடங்களாக இருந்துவந்த இவ்வூர்களில் மழையால் பூமி குளிர்ந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தால் நீர்நிலைகளிலும் நிரம்பி மக்களுக்கு கோடை காலத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கடலூர் மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மழை பெய்வதால் மக்கள் நிம்மதி அடைந்தாலும் மருத்துவ நிபுணர்கள் கருத்தின்படி கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிவிடுமோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது.