நாளை அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
107

குமரி கடல் பகுதியில் நிலை வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்து இருக்கிறது. அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு வேலூர், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அரபிக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.