தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 26ம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
இது மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று தெரிவித்திருக்கிறது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக. இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனாவில் 11 சின்ன கல்லறையில் 10 வால்பாறையில் 8 சென்டிமீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.