அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க!

0
257
Rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மழையின்  தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது.

மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. சேதமடைந்த பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நிவாரண நிதி குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனவரி மாதத்தில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு  ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தென்னிந்திய மீது வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குருச்சி,சேலம் , கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.