வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு:! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!

0
127

வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு!தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும் வட மாநிலத்திலும் மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் காற்றின் வேகம் 30 -40 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும் என்பதனால் மீனவர்களை ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் இந்த காற்றழுத்த தழுவினால் வட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.