அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

0
96
Rain will continue for the next 7 days!! Weather Center Alert!!

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

இன்றிலிருந்து இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றினுடைய வேகமாக மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

11.09.2023-12.09.2023 : தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ள ன.

13.09.2023 முதல் 17.09.2023 வரை- தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உண்டு.

அது மட்டும் இல்லாமல் வானமானது அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரையும் பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 27- 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவு கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோர பகுதிகள் மீனவர்கள்:

11.09.2023- தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வங்க கடல் பகுதி மீனவர்கள்:

12.09.2023- இலங்கையில் கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்.

மேலும் மத்திய மேற்கு வங்ககடல், மத்திய கிழக்கு வங்ககடல், பகுதிகளில் சூறாவளி காற்றானது 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

12.09.2023: இலங்கையின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்ககடலில் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.

13.09.2023: தெற்கு இலங்கை கடலோர கவிதைகள் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும்.

14.09.2023: தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரையில் இடையில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

15.09.2023: மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும்.

அரபிக் கடலோர பகுதிகள்:-

11.09.2023-12.09.2023: அரபிக் கடலில் அமைந்துள்ள லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்றானது வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மேலே குறிப்பிட்ட நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.