தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
104

 

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…

 

தமிழகத்தில் அடுத்து 11 மாவட்டங்களில் இன்றும்(ஆகஸ்ட்10) நாளையும்(ஆகஸ்ட்11) ஆகிய இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெயிலின் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மேலும் ஒரு சில இடங்களில் இயல்பை விட வழக்கத்திற்கு மாறாக 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

 

மேற்கு திசையில் வீசும் காற்றின் மாறுபாடு காரணமாக இன்று(ஆகஸ்ட்10) முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

 

இன்று(ஆகஸ்ட்10) மற்றும் நாளை(ஆகஸ்ட்11) தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

 

சென்னை மாவட்டம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா, அதை ஒட்டி இருக்கும் குமரிக் கடல் பகுதிகளிலும் இன்று(ஆகஸ்ட்10) மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.