தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் இன்று, நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிலும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,என்றும் தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவைக் காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதைப்போல் வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர்,தர்மபுரி,சேலம்,வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,கடலூர் அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வருகின்ற ஜூலை 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மற்றும் ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அந்த நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.