Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயர்த்தப்பட்ட கொப்பரை தேங்காய் விலை!! மத்திய அரசு அளித்த ஒப்புதல்!!

Raised price of copra coconut!! Approved by the central government!!

Raised price of copra coconut!! Approved by the central government!!

வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் பயிர் பருவ காலநிலையிலிருந்து அரை கொப்பரை தேங்காய்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் அதிகப்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

2018-19 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அனைத்து கட்டாய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய மதிப்பில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வருகிற 2025 ஆம் ஆண்டு பருவத்திற்கு கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.11,582/-ஆகவும், பந்து கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12,100/-ஆகவும் நிர்ணயிக்க அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கொப்பரைகளின் மீதான விலை உயர்வு தென்னை விவசாயிகளுக்கு சிறந்த லாபகரமான வருமானத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தேங்காய் பொருட்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசு தரப்பில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு லிமிடெட், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை, உரிக்காத தேங்காயைக் கொள்முதல் செய்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு முகமைகளாக செயல்படுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version