Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

#image_title

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடப்பாண்டு மாமன்னன் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 24ம் தேதி துவங்குகிறது. மேலும் சதய நட்சத்திர நாளான அக்டோபர் 25ம் தேதி அன்று மாமன்னன் இராஜராஜ சோழன் அவர்களின் சிலைக்கு மாலை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த முறை மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசானது மாமன்னன் இராஜராஜ சிவனின் சதயவிழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கும் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், கவியரங்கம், கருத்தரங்கம், திருமுறை அரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் தஞ்சை பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அந்நாளில் அதாவது அக்டோபர் 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Exit mobile version