Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திராவிட சித்தாந்தத்தையே உடைத்தெறிந்த ரஜினிகாந்த்! அதிர்ச்சியில் திமுக!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ள நிலையில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கின்றார் அவருடைய சகோதரர் சத்திய நாராயணன்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருக்கின்றார் எந்த தேதியில் கட்சியை ஆரம்பிப்பது என்பது குறித்த விவரங்களை வரும் 31ஆம் தேதி மக்களுக்கு அறிவித்திருக்கின்றார் அந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனன் மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கட்சி தொடங்குவது குறித்த பணிகள் இப்போது முழுவீச்சில் நடந்து வருகின்றது இரண்டாவது நாளாக மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை செய்து வருகின்றார் பெங்களூரில் தன்னுடைய மூத்த சகோதரர் சத்தியநாராயணன் அவர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்று இருகின்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பித்ததை முன்னிட்டும் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டும் திருவண்ணாமலை கோவிலில் சத்தியநாராயணன் சிறப்பு யாகம் நடத்தி இருக்கின்றார் ரஜினிகாந்த் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க அருணகிரி நாதர் கோவிலில் யாகம் மற்றும் அபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தி இருக்கின்றார் சத்திய நாராயணன்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்தியநாராயணன் கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரஜினி மக்கள் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார் ரஜினி புதிய கட்சியில் இணைய சில அரசியல் பிரமுகர்கள் தயாராகி இருக்கிறார்கள் அவர்களை இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றது கடவுள் நம்பிக்கை அற்ற திராவிட கட்சிகளின் கடைசி காலம் இது எனவும் சத்தியநாராயணா தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version