Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் சென்னைக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்தினரோடு சில நாட்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். மேலும் அவர் அங்கு உடல் பரிசோதனை செய்துவிட்டு சிறிது நாட்களுக்குப் பின் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனை பணிகளை முடித்து விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவர் காலை இரண்டு மணிக்கு சென்னை திரும்பியது மற்றும் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது மகிழுந்தில் ஏறும் காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், அவர் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் எனவும் ரஜினி தரப்பில் உள்ளோர் கூறியுள்ளனர். ரஜினிகாந்த் முழு உடல் நலத்துடன் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

Exit mobile version