அவர் அறிவிப்பை மட்டும் வெளியிடட்டும் மற்றவையெல்லாம் நாங்க பாத்துக்குறோம்! ரஜினி ரசிகர்கள் உருக்கம்!

0
127

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையில் அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பமாக தொடங்கிவிட்டது.

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஹைதராபாத் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்த நான்கு பேருக்கு தொற்று என்ற செய்தி அறிந்து பதற்றம் ஆகிப் போனார்.அதோடு ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்து டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சுமார் ஒரு வாரகாலம் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய மருத்துவர்கள் நேற்றையதினம் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினார்கள். அதோடு நேற்று மாலையே சென்னை திரும்பியிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த தகவல் தெரிந்ததும், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அரசியல் கட்சி தொடர்பான தகவலை தெரிவிக்க இருப்பதாக அவர் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அறிவித்தது என்னவாகும், என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் இடையையும், அரசியல் கட்சிகள் எடையையும், அதிகரிக்க தொடங்கியது.

உடனடியாக ரஜினியின் மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகருக்கு பலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரோ எனக்கு எதுவும் தெரியாது. தலைவர்தான் அனைத்தையும் முடிவு செய்வார் . பொறுமையாக காத்திருங்கள் என்று பதிலளித்திருக்கிறார்.

இதன்காரணமாக, ஆத்திரமடைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், முன்பெல்லாம் சத்திய நாராயணா, ராஜூ மகாலிங்கம், இளவரசன், போன்றோர் இருந்தபோது சில விஷயங்களை தெரிவிப்பார்கள். ரஜினிக்கும் எங்களுக்கும் பாலமாக இருந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது சுதாகர் அவர்கள் எதைக் கேட்டாலும் தலைவர்தான் என்று தெரிவிக்கின்றார். இதன் காரணமாக மக்கள் மன்றத்தில் மிகுந்த குழப்பம் நிலவி வருகின்றது என்று தெரிவிக்கிறார்கள்.

அதோடு, தலைவர் கட்சியைத் தொடங்கப் போகிறேன் என்ற விஷயத்தை சமூக ஊடகங்கள் மூலமாக இந்த மாத ஆரம்பத்தில் உறுதிபட தெரிவித்தார். இப்பொழுது அவர் ஓய்வெடுக்கட்டும். ஆனாலும் அதே வழியில் அவர் வாக்குறுதி அளித்தபடி தொடக்கத்தை ட்விட்டரில் கூட அறிவித்து விடலாம். அனைத்து செயல்களிலும் தலைவருடைய இருப்பு அவசியம் கிடையாது. அவருடைய உடல்நிலை தொடர்பாக அனைவருக்கும் தெரியும் என்ற காரணத்தால், அவரது முழு மனதுடன் அரசியல் பயணத்திற்காக தன்னுடைய உறுதியான குரல் மட்டுமே எங்களுக்கு வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அநேக கட்சிகள், அவர்களுடைய நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள், மற்றும் பொதுமக்களுடன் காணொளி மூலமாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். சிறிய கட்சிகள் கூட இந்த தொழில்நுட்பத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள். கொரோனா சமயத்தில் காணொலி என்ற தொழில்நுட்பம் அத்தியாவசிய தேவையாக மாறிப் போயிருக்கின்றது ஆகவே தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் இதே பாணியில் காணொளி மூலமாக அறிவிப்புகளை வெளியிடலாம். அவருடைய மக்கள் மன்றத்தில் ஆயிரக்கணக்கான வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் இருக்கின்றன. அவற்றின் மூலமாக அவருடைய செய்தியை மாநிலம் முழுவதும் கொண்டு செல்வதற்கு வலுவான கட்டமைப்பு இருக்கின்றது. எங்களுக்கு இப்பொழுது ரஜினிகாந்த் அறிவிப்பு மட்டுமே தேவைப்படுகின்றது ஓய்வில் இருக்கட்டும் என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

அதே சமயத்தில் உடல் உழைப்பு மட்டும் கிடையாது. சிந்தனை கூட ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் ஒரு காரணியாக ஆகிவிடும். விவாதங்கள், ஆலோசனைகள், முடிவெடுக்கும் முன்னர் ஏற்படக்கூடிய மனநிலை போன்றவையும் இந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும். ஆகவே பத்து தினங்கள் ரஜினிகாந்த் அவர்கள் அமைதியான ஓய்வில் இருக்கட்டும் அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம் எனவும் ரஜினிக்கு ஒரு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.