சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ்நாட்டிற்காக என்ன தொண்டு செய்து இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் விளங்கும் பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு.
யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த பாலாஜி பிரபு அவர்கள், ரஜினிகாந்த் அருணாச்சலம் திரைப்படத்தின்போது, ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார். அது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்த தயாரிப்பாளர்களுக்கு அந்தப்படத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில், ஒரு பங்கை கொடுக்கப்போகிறேன் என்பது தான்.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் என்னுடைய அப்பாவான பாஸ்கர் இயக்கத்தில் வெளியான படம் பைரவி. இப்படத்தில் தன் அப்பாவுடன் வேலை பார்த்ததால் அவரையும் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டிற்கு இந்த லாப பங்கினை குறித்து பேச அழைத்தார் என்று பாலாஜி கூறியிருக்கிறார்.
சென்ற இடத்தில் இயக்குனர் பாஸ்கரிடம் ரஜினி அவர்கள் என்னுடைய லாப பங்கு கணக்கில் தங்களுக்கும் கொடுக்கலாம் என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு இயக்குனர் அவர்கள் எனக்கு இலவசமாக எதுவும் வேண்டாம். நீங்கள் என்னுடைய படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுங்கள். இல்லையென்றால் உங்களுடைய படத்தில் நான் கதை மற்றும் திரைக்கதை வசனங்களை எழுதி தருகிறேன் என்று கூறியிருக்கிறார். எனினும் இவற்றை ரஜினி அவர்கள் ஏற்கவில்லை. எனவே இந்த இலவசம் எனக்கு வேண்டாம் எனக் கூறி என்னுடைய தந்தையாகிய பாஸ்கர் முடிவெடுத்துவிட்டார் என்று பாலாஜி பிரபு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இவர்களை தொடர்ந்து ரஜினி அவர்கள் லாப பங்கு கணக்கை குறித்து ஸ்ரீதர் அவர்களிடம் பேசி இருக்கிறார். அதனை ஏற்க ஸ்ரீதர் அவர்களும் மறுக்கவே ரஜினி அவர்கள் இதைப்பற்றி வேறு யாரிடமும் பேசாமல் நிறுத்திக் கொண்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் இவர் கோபமாக ரஜினியை குறித்து கூறும் பொழுது, நடிகர் ரஜினிகாந்த் யாருக்காவது ஏதேனும் ஒரு உதவி செய்திருப்பாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு உதவுவது, முதியோர்களுக்கு முதியோர் இல்லங்கள் கட்டிக் கொடுப்பது என எந்தவிதமான நல்ல விஷயங்களையும் இவர் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவை மட்டுமின்றி, கன்னட நடிகர் புனித் ராஜ் அவர்களை குறிப்பிட்டு இவர் உயிரோடு இருந்த பொழுது பள்ளி குழந்தைகளுக்கு படிப்பிற்கான செலவுகளை செய்து வந்தார் என்றும் அவர் இறந்த பின்னும் இவருடைய குடும்பத்தினர் அதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா துறையிலும் நடிகர் சூர்யா அவர்கள் அகரம் பவுண்டேஷன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி வருவதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவற்றை அனைத்தையும் குறிப்பிட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் யார் ஒருவருக்கும் தன்னுடைய சுண்டு விரலை கொடுத்து கூட உதவ மாட்டார் என்றும் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.