ரஜினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

0
110

ரஜினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

சென்னை: நடிகர் ரஜினியை போராட்ட களத்திற்கு வருமாறு இணையத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும் நேரத்தில் நிச்சயம் போராடுவோம் என்று பேசியிருந்தார். இதன்பிறகு துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய பேச்சுகளும் சர்ச்சையான விவாதங்களை உண்டாக்கியது.

இந்நிலையில், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். கைது செய்யபட்ட போராட்டகாரர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். தனது உரிமைக்காக போராடும் வேளையில், மேடை மட்டும் வசனம் பேசிவிட்டு களத்திற்கு வராத ரஜினியை வீதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இன்று டுவிட்டரில் வீதிக்கு வாங்க ரஜினி என்றும், போராட வா ரஜினி தாத்தா என்றும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ திருத்த சட்டத்தை ஆதரித்த காரணத்தால் தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. போராட்டம் நேற்றும் கலைந்துவிட்ட நிலையில் இன்று மீண்டும் சில இடங்களில் பாஜகவையும், ரஜினியையும் விமர்சித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.