Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த படத்துக்கு ரஜினி பட டைட்டில்… கெட்டப்பில் மாற்றம்… சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

அடுத்த படத்துக்கு ரஜினி பட டைட்டில்… கெட்டப்பில் மாற்றம்… சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்துக்கு ரஜினிகாந்த் பட டைட்டிலை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப முடியாதது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனைப் படமாக அமைந்தது.இந்த படம் பட்டித்தொட்டி கிராமங்களில் எல்லாம் சிவகார்த்திகேயனை கொண்டு போய் சேர்த்தது என்றே சொல்லலாம்.

அதையடுத்து அவர் நடித்த டாக்டர், டான் மற்றும் எங்க வீட்டுப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் அவரை மேலும் உயர்த்தியுள்ளன. இப்போது அயலான் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக பேசப்படுகிறது. மேலும் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கப் போவது இயக்குனர் மிஷ்கின் என்றும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ மூலமாக இந்த வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கு 80 களில் வெளியான பழைய ரஜினி பட டைட்டிலான ‘மாவீரன்’ என்ற தலைப்பை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்காக அதிக முடிவளர்த்து சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றம் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Exit mobile version