Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியலில் தலைக்காட்டும் ரஜினி!! பரபரப்பு பேட்டி!!

Rajini to headline politics !! Exciting interview !!

Rajini to headline politics !! Exciting interview !!

அரசியலில் தலைக்காட்டும் ரஜினி!! பரபரப்பு பேட்டி!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் பங்களித்தனர். அதில் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் உதயநிதி, கமல் போன்ற சில சினிமா பிரபலங்களும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பங்களித்தனர். பின்பு தேர்தல் முடிந்த சில மாதங்களில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்வி மக்களுக்குள் எழுத்து. இதை குறித்து ரஜினியுடன் பேசிய போது ஆலோசித்து சொல்வதாக  கூறியிருந்தார்.

பின்பு இவரின் அண்ணாத்த திரைப்படத்தின் படபிடிப்பும் முடியாமலா இருத்து. கொரோனா வைரஸ்  இரண்டாம் அலை மக்களிடையே வேகமாக பரவி வந்ததன் காரணமாக அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் இவரின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்தா நிலையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மருத்துவ சிகிச்சையை முத்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியப்போது தற்போது தான் கொரோனா பரவல் சிறிது குறைந்துள்ளது, மேலும் என்னுடைய அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற பயணமும் முடிந்துள்ளது, இதற்கு மேல் தான் நான் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்று ஆலோசனை செய்ய வேண்டும். மேலும்  இது குறித்து ஆலோசனை செய்த பிறகு என்னுடைய முடிவை கூறுகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Exit mobile version