Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் நலமுடன் இருக்கிறேன் கவலைப்படாதிங்க! ரஜினி மாஸ்!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தத்தின் காரணமாக, அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி உடல்நிலை தொடர்பாக அவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சகோதரர் ரஜினிகாந்த், உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜனதா கட்சியின் தலைவர் பவன்கல்யாண், கமல்ஹாசன், போன்ற பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இருக்கிறார்கள்.

அதேபோல ,மதிமுகவின் நிறுவனர் வைகோ தொலைபேசியில், ரஜினிகாந்திடம் உரையாடியபோது , ரஜினிகாந்த் தான் நலமுடன் இருப்பதாக வைகோவிடம் தெரிவித்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version