தலையில் முடி இல்லாததால் அவமதிக்கபட்ட ரஜினி!! அவமானப்படுத்தியவர் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் நம்பர் 01 ஹீரோவாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் இவரின் தனித்துவமான நடிப்பு மற்றும் ஸ்டைலால் இவருக்கென்று உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
தற்பொழுது “வேட்டையன்” படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற டைட்டில் கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார்.73 வயதிலும் அதிக மவுசு கொண்ட ஹீரோவாக திகழும் ரஜினி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.இவர் அஜித்,விஜய்,சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர்.
பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “சிவாஜி” படத்தில் பணியாற்றிய போது இது நிகழந்ததாம்.சிவாஜி படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி கொண்டிருந்த வட இந்திய இளைஞர் ஒருவரை ரஜினி அவர்கள் வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பாராம்.அந்த இளைஞருக்கு தமிழ் சரியாக பேச தெரியாது.ஹிந்தி மற்றும் தமிழை மிக்ஸ் செய்து பேசுவதை பார்த்து ரஜினி கிண்டல் செய்து சிரிப்பாராம்.
ஒருநாள் படப்பிடிப்பின் போது அந்த இளைஞர் ரஜினியிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.அதற்கு ரஜினி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால் விக்கை கழட்டி வைத்து விட்டு வருகிறேன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதை கேட்ட அந்த வட இந்திய இளைஞர் எனக்கு போட்டோவே வேண்டாம் என்று சொல்ல ஏன் என்று ரஜினி கேட்டு இருக்கிறார்.உங்களுக்கு முடி இருந்ததால் தான் என் ஊர் மக்கள் ரசிப்பார்கள்.உங்கள் தலையில் விக் இருந்தபடியே போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த இளைஞர் கூறி இருக்கிறார்.பிறகு அந்த இளைஞரின் விருப்பத்தை ஏற்று தலையில் விக் வைத்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்தார் என்று ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவர்கள் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
திரையில் சூப்பர் ஸ்டாரை ஸ்டைலாக காட்டியதில் அவரது தலைமுடிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அப்படி இருக்கையில் அவருக்கு தலை முடி கொட்டியதற்கு காரணம் என்னவென்று அவரே ஒரு மேடை பேச்சில் வெளிப்படையாக
தெரிவித்து இருக்கிறார்.20 வயதில் அவருக்கு வெள்ளை முடி பிரச்சனை இருந்ததால் அதை மறைக்க டை அடிக்க தொடங்கி இருக்கிறார்.
இதை வழக்கமாக வைத்துக் கொண்டதால் தலையில் உள்ள முடி கொட்டத் தொடங்கி இருக்கிறது.ஒரு கட்டத்தில் தலையில் உள்ள முக்கால் வாசி முடி கொட்டி போகவே வேறு வழியின்றி விக் வைத்து கொண்டு நடிக்க ஆரம்பித்தேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.