விஜய் இறங்கி வந்தால் ரஜினி அதற்கு சம்மதம் தெரிவிப்பார்!! நடக்குமா? ரசிகர்கள் ஆவல்!!

0
102
#image_title

விஜய் இறங்கி வந்தால் ரஜினி அதற்கு சம்மதம் தெரிவிப்பார்!! நடக்குமா? ரசிகர்கள் ஆவல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். இவர்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே திரையரங்குகளுக்கு திருவிழா தான்.ரஜினி மற்றும் விஜய்க்கு இருக்கின்ற ரசிகர் கூட்டம் தான் அவர்களுக்கு பலமே.இந்த இரண்டு நடிகர்களும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் இவர்களின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழும் நிலைக்கு தமிழ் திரையுலகை ஆட்டிப் படைத்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிக்கு ரசிகராக இருந்து பின்னாளில் அவருக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டியாளராக உருவாகி இருக்கும் விஜய் அவர்களின் அசுர வளர்ச்சி பாராட்டதக்க ஒன்று தான்.அனால் இதனால் இருவருக்கிடையே மறைமுக வார்த்தை மோதல் நிலவும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் கழுகு – காகம் கதை கூறி நேரடியாகவே விஜய்யை தாக்கி பேசியிருந்தார்.இதனால் விஜய் ரசிகர்கள் ரஜினி மீது கடும் கோபத்தில் இருந்தனர்.இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 30 அன்று ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்க இருக்கும் நிலையில் ரஜினியின் பேச்சுக்கு பதிலடி தருவதற்காக விஜய் ஒரு குட்டி கதை தயார் செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் கமல் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களையும் இந்த விழாவில் கலந்து கொள்ள வைக்க படக்குழு முயற்ச்சி எடுத்து வருகிறது.படக்குழு தரப்பில் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருக்கும் நிலையில் ரஜினி இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு சிலர் தளபதி விஜய் அவர்கள் நேரில் சென்று ரஜினியை அழைத்தால் அவர் கண்டிப்பாக ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.