Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன்.. நடிகர் ரஜினி புகழாரம்..!

Supesrstar Rajinikanth

#image_title

Superstar Rajinikanth: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் (captain vijayakanth) தான். இன்றளவும் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நடிகர் என்று கூறினால் அது விஜயகாந்த். தன்னால் இயன்ற அளவு மக்களின் பசியாற்றிய ஒரு தலைவன் என்றால் அது நடிகர் விஜயகாந்த். அவரை தேடி வந்தவர்களை பசியோடு அனுப்பாமல் வயிறு நிறைய சோறு போட்டு அனுப்பிய ஒரு தலைவன் என்று மக்களால் பாராட்டப்பட்டவர் நடிகர் விஜயகாந்த்.

இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல், அரசியலிலும் ஈடுபட்டு தன்னால் இயன்ற அளவு மக்களுக்கு உதவிகளை செய்து மக்களின் துயர் துடைத்து வந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.

இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பொழுதும் அவரின் இறுதி நல்லடக்கத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவரின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் நல்லடக்கம் செய்த இடத்திற்கு மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அங்கும் வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது (captain vijayakanth padma bhushan) வழங்குவதாக அறிவித்தது. இது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த மே ஒன்பதாம் தேதி டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதாவிடம் கேப்டன் விஜயக்காந்திற்கான பத்மபூஷன் விருதினை குடியரசு தலைவர் வழங்கினார்.

கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் வழங்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லாததை இன்றளவும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பத்ம விருதுகளின் பட்டியலில் விஜயகாந்தின் வரலாற்றை பதிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. திடீரென தோன்றி சாதனைகள் பல செய்து நம்மிடம் தற்போது இல்லாமல் மறைந்து விட்டார் கேப்டன் விஜயகாந்த்.

இனிமேல் கேப்டன் விஜயகாந்த் போன்ற ஒரு மனிதரை நம்மால் பார்க்க முடியாது. நான் அவரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். மதுரையில் பிறந்த நம் மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த். எப்பொழுதும் அவருடைய நாமம் வாழ்க.. என்று கூறி மனம் உருகி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும் படிக்க: போக்குவரத்து ஊழியர்கள் சம்பள கணக்கிலிருந்து 200 கோடி அபேஸ்.. கண்டுகொள்ளாத அதிகாரி!! குமுறும் தொழிலாளர்கள்!!

Exit mobile version