Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நயன்தாரா விக்கி திருமணத்தில் ரஜினிகாந்த்… புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே இவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. இதனை இருவரும் கையில் மோதரத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு  உறுதி செய்தார் விக்கி.இவர்கள் இருவரும் அண்மையில் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகை நயன்தாரா கண்மணி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மேலும் இவர்களின் திருமணம்.

ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமனத்துக்குப் பின் இவர்கள் இருவரும் இணைந்து திருப்பதிக்கு  சென்று வந்தனர். பின் சென்னையில் பிரஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள்.  தேன்நிலவு முடிந்து இருவரும் தங்கள் படங்களுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் திருமனம் முடிந்து ஒருமாதத்தைக் கொண்டாடும் விதமாக விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்துக்கு வந்து வாழ்த்திய சூப்பர் ஸ்டாரின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Exit mobile version