Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம்… பின்னணி என்ன?

மீண்டும் தாமதம் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம்… பின்னணி என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சில காட்சிகளை முதலில் படமாக்கலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் இப்போது அதுவும் ஒரு மாதம் தாமதம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம்தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தன.

சமூகவலைதளங்களில் பல ட்ரோல்களும் உருவாகின. இதையடுத்து இப்போது இந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் சில முன்னணி இயக்குனர்களை பணியாற்ற சொல்லி ரஜினி பரிந்துரை செய்ததாகவும் சொல்லப்பட்டது.

Exit mobile version