Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்தை தவிர நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படையப்பா படத்துக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் ரஜினியோடு இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version