Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

இந்திய அளவில் ட்ரண்ட்டான ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் லுக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் நெல்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார்.  அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கிரண் கலை இயக்குனராகவும் பணியாற்ற உள்ளனர். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே போல யோகி பாபு நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜெயிலர் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்தின் அட்டகாசமான கேரக்டர் லுக் போஸ்டர் ஒன்றையும்  வெளியிட்டது.

இந்த போஸ்டர் வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷியாக்க பலரும் அந்த போஸ்டரை பகிர்ந்து ஜெயிலர் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கினர். இதையடுத்து இந்திய அளவில் இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களில் ட்ரண்ட் ஆனது.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் படத்துக்காக போடப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடக்கும் என சொல்லப்படுகிறது.  அடுத்த ஆண்டில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version