Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் யார்? கசிந்த தகவல்

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் யார்? கசிந்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ என்ற படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பில் இடைவெளியின்றி நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக 60 நாட்கள் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ’தலைவர் 169’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த படம் குறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர்களை ரஜினிகாந்த் தற்போது முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து வெளியாகும் என்றும் தெரிகிறது

’தலைவர் 169’ படத்தை தயாரிக்க இருப்பது அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’தலைவர் 169’ படத்தை அடுத்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு அதன்பின்னர் கட்சி அறிவிப்பை அவர் வெளியிடவிருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version