திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்: ரஜினிகாந்த்

0
135

திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்

இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் கூறியபோது, ‘திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியிருக்கும் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. திருவள்ளுவர் ஒரு சித்தர், ஞானி. சித்தர், ஞானிகள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்

அதே நேரத்தில் திருவள்லுவர் ஒரு ஆத்திகர், கடவுள் நம்பிக்கை உடையவர். நாத்திகர் இல்லை. மேலும் நாட்டில் எவ்வளவோ மக்களுடைய பிரச்சினை இருக்கும் போது திருவள்ளுவர் விவகாரத்தை பெரிதாகத் தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

மேலும் பொன் ராதாகிருஷ்ணன் அடிக்கடி என்னை வந்து சந்திப்பதால் தான் பாஜகவில் இணையவிருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயற்சிப்பது போல் எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிக்கின்றது அதில் திருவள்ளூர் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

முன்னதாக கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்ற கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கே.பாலசந்தருடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் கமல்ஹாசனுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.