Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினிகாந்த் இந்த படத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டாராம்! வைரலாகும் வீடியோ!

Rajinikanth wanted to act in this film! Viral video!

Rajinikanth wanted to act in this film! Viral video!

ரஜினிகாந்த் இந்த படத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டாராம்! வைரலாகும் வீடியோ!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் படம் என்றால் அது ரஜினியின் படம் தான். அவர் நடக்கும் அனைத்து படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. தற்போது வரையிலும் ரஜினி தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நெல்சன் இயக்கும் அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங்கும் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தை நேற்று ஆர்.பார்த்திபன் சந்தித்து பேசி இருக்கிறார். இரவின் நிழல் படம் பார்த்த ரஜினி அவரை வீட்டிற்கே அழைத்து ரஜினி பாராட்டினார்.மேலும் அப்போது ரஜினி அவரிடம் ‘நீங்க பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோலில் நடிக்கிறீங்கள் ‘ என்றும் கேட்டுள்ளார். மேலும் அதற்கு ஆர்.பார்த்திபன் பதில் கூறினார் . ரஜினி பொன்னியின் செல்வன் கதையை பல முறை படித்திருக்கிறேன் என கூறினாரார்.

மேலும் பொன்னியில் செல்வனில் நடிக்க ஆசை என்று ரஜினி கூறினார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தான் ஷூட்டிங் செல்லும் போது கிடைக்கும் இடைவேளை நேரங்களில் பொன்னியின் செல்வன் படித்தேன் எனவும் பார்த்திபனிடம் ரஜினி கூறினார்.மேலும் ரசிகர்களுடன் இந்த தகவலை லைவ் வீடியோவில் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

Exit mobile version