ரஜினிக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருந்த கே. பாலச்சந்தர்!! சத்யநாராயண ராவ்!!

0
76
Rajini's father K. Balachander!! Satyanarayana Rao!!

ரஜினியின் உடைய தாய்க்கு 16 வருடங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் வீட்டின் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தரிசனத்திற்கு போகாமல் உணவு அருந்த மாட்டார் என்று ரஜினியின் அண்ணனான சத்ய நாராயண ராவ் பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். அப்படி தவம் இருந்து பெற்ற மகன்களில் ரஜினி நான்காவதாக பிறந்தவர் என்றும், கருவில் இருந்தே தெய்வீக குழந்தையாகவே உருவானதாகவும் அவருடைய அண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் கே. பாலச்சந்தர் அவர்கள் குறித்து இவர் பேசியிருப்பதாவது :-

ரஜினியின் உடைய வாழ்வில் முக்கியமான சந்தர் அவர்கள் மிகவும் முக்கியமான நபர் என்று தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், ரஜினி நடித்த நாடகத்தில் ராமகிருஷ்ண மடத்தில் இருந்த சாது கலந்து கொண்டு அவரைப் பார்த்து வெகுவாக பாராட்டி இருக்கின்றனர். அதன் பெண் நாடக மேடைகளில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மதராஸ் இன்ஸ்டிட்யூட்டில் சேர்வதற்காக அறிவிப்பு வந்துள்ளது. அப்போது அங்குள்ளவர்கள் அனுமதி கொடுத்து தாராளமாக சென்று வரும்படி அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின் குரு ஸ்தானத்தில் இருக்கும் பாலச்சந்தர் அவர்கள் தான் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ஒரு சின்ன கேரக்டரை கொடுத்து ரஜினியினுடைய இன்பத்திலும் துன்பத்திலும் அவருடன் நின்று அவருக்கு மற்றொரு தகப்பனாக ரஜினியை பாதுகாத்ததாக ரஜினியின் உடைய அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசி அவர், அதில் குறிப்பாக தன்னுடைய தாய்க்கு தாய்ப்பால் சுரக்க வில்லை என்றும் அதற்கு பதிலாக மாட்டின் பால் குடித்து தான் நடிகர் ரஜினிகாந்த் வளர்ந்ததாகவும் தெரிவித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த காரணத்தால் தான் மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அண்ணாமலையில் ஒரு பாட்டில் கூட நடித்திருக்கிறார் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.