ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம்
டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதுவரை எந்திரங்களால் செய்யப்பட்ட தீக்குச்சிகளுக்கு ஜி.எஸ்.டி வரி 18 சதவீதமாகவும் கையால் செய்யப்பட்ட தீக்குச்சிகளுக்கு 5 சதவீதமாகவும் இருந்தது.ஆனால் இந்த கூட்டத்தில் அனைத்து வகையான தீக்குச்சிகளுக்கும் 12 சதவீத வரியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மேலும் ரஜினிகாந்த் கைறிய எந்த கருத்தும் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது அவை அனைத்துமே தி.மு.க.க்கு மட்டுமே பொருந்தும்.
எந்த சக்தியாளும் இனி அ.தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாது. 2021 ஆம் ஆண்டு மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி கோட்டையில் பறக்கும் என்றும் தெரிவித்தார்.
கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் மிகவும் சிறப்பான முறையிலே செய்யப்பட்டு வருகிறது. நானும் டெல்லியில் இருந்து சென்னை வந்த உடனே எனக்கும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது நான் எப்போதும் கூலாக இருப்பதால் என்னை எந்த வைரஸும் தாக்குவதில்லை என்றும் தெரிவித்தார்.