Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!

டெல்லி: இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார்.

ஆனால் இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம் என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் 2 ஆகிய படங்களில் நடித்து முடித்தவுடன் இமயமலைக்கு பயணமானார்.

இந் நிலையில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. படத்தின் மற்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக ரஜினியின் படத்தை சிறுத்தை சிவா இயக்க இயக்குகிறார்.

தற்போது ஓய்வுக்கு இமயமலைக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டிருக்கும் படம் தான் இணையத்தில் வைரல். தயானந்த சரஸ்வதி ஆசிரமம் அமைந்த ரிஷிகேசுக்கு அவர் சென்றார்.

அங்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version