Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திரும்பிபாத்தா 10 கோடி கேட்பாங்களோ..ஒரே இடத்தில் சந்தித்து கொண்ட ராக்காயி இட்லி கடை!!

Rakai Itli Shop which met 10 crore customers in one place!!

Rakai Itli Shop which met 10 crore customers in one place!!

Cinema news: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பற்றி நயன்தாரா சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆவணப்படம் வெளியிட பிரபல நடிகர் தனுஷ் NOC கொடுக்கவில்லை என்றாலும் பல சவால்களை சந்தித்து  விக்கி மற்றும் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியானது.

தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனைகள் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் சில காலங்களுக்கு முன்பு மிக நெருங்கிய நட்புடன் தான் இருந்தார்கள். இந்த திருமண ஆவணப்படத்தில் தான் இவர்களுக்கு பூகம்பம் வெடித்தது. இந்த பிரச்சனைகளுக்கு பிறகு இருவரும் எப்படி ஒன்றாக சந்தித்து கொள்வார்கள் என ரசிகர்கள் நினைத்துகொண்டிருந்தர்கள்.

அந்த வகையில் தனுஷ் நடித்து கொண்டிருக்கும்  இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ்ற்கு திருமணம் நடந்திருக்கிறது. அந்த திருமண விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருமே கலந்து கொண்டார்கள். அதில் திருமண மண்டபத்திற்கு முதலாவதாக தனுஷ் வந்துவிட்டார். அதற்கு பிறகு தான் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் வந்துள்ளார்கள். மேலும் திருமண மண்டபத்தில் தனுஷ் அமர்ந்திருக்கும் அதே வரிசையில் தான் நயன்தாராவுக்கும் இருக்கை இருந்தது. ஆனால் அந்த திருமண விழாவில் இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Exit mobile version