Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய ராமதாஸ்! பரபரப்பில் பாமகவினர்!

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் அன்புமணி முதலமைச்சராக பாட்டாளி மக்கள் கட்சியினர் உழைக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 4ஆம் தேதி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதினார், அதில் 2026ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மற்றொரு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கின்ற மருத்துவர் ராமதாஸ் நான் எழுதிய கடிதத்தை பெற்ற மாவட்டச் செயலாளர்களில் ஒரு சிலர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்த கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் பலர் ஆண்டு பணியை ஆரம்பிக்கவில்லை அவர்களும் அடுத்த ஓரிரு தினங்களில் பொதுமக்களை சந்திக்கும் பணியை ஆரம்பித்தார்கள் என்று நம்புகின்றேன். எல்லோரின் செயல்பாடுகளையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றேன், சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டுகளும் செயல்படாதவர்களுக்கு கண்டிப்பும் உறுதி என தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு பல மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்கள் தங்களுக்கு பதவி கிடைப்பதற்கு முன்பே அந்த கடிதத்தை படித்திருக்கலாம். படித்தவர்கள் அந்த கடிதத்தில் இருக்கின்ற அம்சங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளவாறு அந்த கடிதத்தில் இருக்கின்ற அம்சங்களை புதிய மாவட்டச் செயலாளர்களும், மக்களை சந்தித்து நினைவுபடுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

மக்கள் சந்திப்பை தொடர்ந்து அடுத்த கட்ட பணி நமக்கு காத்திருக்கிறது கட்சி அமைப்பு ரீதியிலான ஒன்றியங்களில் இருசக்கர ஊர்தி பேரணி நடத்துவது தான் நம்முடைய அடுத்த கட்ட பணி .நம்முடைய கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒன்றியம் என்பது 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது ஆயிரம் பேர் இரு சக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று நம்முடைய கொள்கைகளையும், சாதனைகளையும், சொல்லவேண்டும் ஏதாவது ஒரு கிராமத்தில் அங்கு இருக்கின்ற மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைப் பெறுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறியிருக்கிறார்.

ஒன்றிய அளவிலான இருசக்கர ஊர்தி பேரணியை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் நானே நேரில் வந்து ஆரம்பித்து வைக்க இருக்கிறேன். மாவட்டச் செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும், ஒன்றாக இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். இது குறித்த அறிவிப்பை கட்சி தலைமை மிக விரைவில் வெளியிடும், மக்களின் ஆதரவை வெல்வோம். புதியதோர் தமிழகம் படைப்போம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பை அடுத்து இரு சக்கர பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version