Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவியது ஏன் காரணத்தை தெரிவித்த டாக்டர் ராமதாஸ்! அதிர்ச்சியுற்ற நிர்வாகிகள்!

அன்புமணி தோல்வியுற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் சரியாக தேர்தல் பணி செய்யாததே காரணம் என்று ராமதாஸ் குற்றம் சாட்டி இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இணைய முறையில், இன்று நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மற்றும் கட்சியின் மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றார்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுக்குழுவில் ஆரம்ப உரையாற்றிய ராமதாஸ், பாமகவை தொடங்கி 31 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும், இன்று நம்மிடம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. கட்சி ஆரம்பித்த நான்கு மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் 6.5 சதவீத வாக்குகளை நாம் பெற்று இருந்தோம். ஆனால் இப்பொழுது 5.6 சதவீதம் வாக்கு என்ற நிலையில் நம்முடைய வாக்கு வங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தங்களை சரிவர வழிநடத்த தவறியது தான் இதற்கு காரணம் என்று கூட நான் சில நேரங்களில் யோசிப்பது உண்டு. எல்லா விதத்திலும் பயிற்சி அளித்து விட்டேன்.அவ்வாறு என்றால் கோளாறு உங்களிடம்தான் இருக்கின்றது. அன்புமணி கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் தோல்வியுற்றார் கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் தோற்றுப்போனார். இதற்கு காரணம் நீங்களே’ தாங்கள் சரியாக தேர்தல் பணி செய்யாதது தான் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி அடையாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும். அரசியல் மாற்றம் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு வெறும் கனவாகவே போய்விடுமோ என்று குறிப்பிட்ட அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியாமல் தேர்தல் வேலைகளை செய்வார்கள் அந்த அமைப்பை போல பாட்டாளி மக்கள் கட்சியினரும் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகின்றார்.

Exit mobile version