Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராமதாஸின் உருக்கமான பதிவால் உச்சமடைந்த பாமகவினர்!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டு முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கு பெறுவதற்காக வாகனங்களில் சென்னை வந்த பாட்டாளி மக்கள் கட்சியினரின் காவல்துறையினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக கோபமடைந்த அந்த கட்சியினர் அங்கேயே சாலைமறியலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அங்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டனர். இதன்காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.

தங்களை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காத காரணத்தால் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்கள் குழு ஒன்று பெருங்களத்தூர் தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில் மீது கற்களை வீசி எறிந்தார்கள். இதைக்கண்ட தொடர் வண்டியின் ஓட்டுநர் தூரத்திலேயே ரயிலின் வேகத்தை குறைத்து விட்டார். மேலும் அந்த ரயிலை செல்ல விடாமல் பாமகவினர் தடுத்தனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்ளலாம் என்ற தகவல் பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து இருப்பது போன்ற உடல்நிலை காரணங்களால் ராமதாஸின் வருகை தவிர்க்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி பு .தா அருள்மொழி ஏ.கே மூர்த்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.

இந்நிலையில் ராமதாஸ் தன்னுடைய வலைப்பக்கத்தில் என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் இருக்கின்றது உயிரும் உள்ளமும் சென்னை போராட்ட களத்தில் தான் இருக்கின்றன என்று குறிப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வன்னியர் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளையும் அவர் பதிவு செய்திருந்தார்.

Exit mobile version