மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!
தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த கோரி பாமக நெடுங்காலமாக பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது என்றும், மது ஆலைகளை மூடுவதாக 2016 ஆம் ஆண்டு திமுக வாக்குறுதி அளித்திருந்தது, திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு திமுகவிடம் இருந்து பதில் வருமா என்று தெரியவில்லை.
மேலும், தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது தான் தமிழக அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர, மதுக்கடைகளை திறப்பது அல்ல என்றும் ராமதாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஜப்பான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியரைமீட்க வேண்டும் என்ற ராமதாஸின் டுவிட்டர் கோரிக்கைக்கு, மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் நடவடிக்கை எடுப்பதாக கூறி தமிழில் டுவிட்டர் செய்திருந்தார். பதில் கொடுத்த வெளியுறவு அமைச்சருக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழக சொந்தங்கள் சொந்த ஊர் திரும்பும் நாளே மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.