கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை போட வேண்டும்! ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்!!

Photo of author

By Jayachandiran

கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை போட வேண்டும்! ஸ்டாலினை கலாய்த்த ராமதாஸ்!!

திமுக செயல்தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர் செய்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அதிமுக அரசு சட்டமசோதாவை நிறைவேற்றியது. இதனையடுத்து ஆளுநரும் அதற்கான ஒப்புதல் அளித்து உறுதி செய்தார். இதனால் தமிழக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியை தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுகவை விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கலாயக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட் செய்துள்ளார். அதில், விவசாயிகளின் பாதுகாவலனாக மாற வேண்டுமெனில் இப்படி செய்யுங்கள் என்று ஸ்டாலினின் கடந்தகால அரசியலை தோலுரிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.

கீச்சகத்தில் கூறியிருப்பதாவது :
விவசாயிகளின் பாதுகாவலனாக மாற வேண்டுமெனில் எளிய வழியை கடைபிடியுங்கள் என்று சில ஆலோசனையை கூறியுள்ளார்.

1) கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் பாதை அமைத்து செல்ல வேண்டும்
2) மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட வேண்டும்.
3) பெட்ரோலிய மண்டலத்தை அறிவிக்க வேண்டும்.
4) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பற்றி புரியாமல், சிறப்பு பொருளாதார மண்டலம் என்று உளற வேண்டும்.
5) சிறப்பு வேளாண் மண்டல மசோதா வாக்கெடுப்பின் போது சட்டசபையில் வெளி நடப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு, ஸ்டாலினை கலாய்த்து பதிவு இட்டுள்ளார். திமுக தரப்பில் இதற்கு பதிலடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version