Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் நம்பமுடியாது!!

சென்னை: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து தற்போது முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.

என்ன காரணம் என்று பார்க்கும்போது

ரமணன் தனது பேட்டியில் கூறியதாவது , பொதுவால் மழை வருவதற்கு சில காரணம் இருக்க வேண்டும்.உதாரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது சுழற்சி இருக்க வேண்டும்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.


கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.

வடககிலிந்து வந்த காற்றானது

மஹாராஷ்டிரா, குஜராத் வழியே இது ராஜஸ்தான் சென்றுவிட்டது. ஆனால் இதனால் அரபிக்கடல் காற்று தமிழகம் வழியாக இழுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் மேலடுக்கு சுழற்சியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்த காற்று தமிழகம் வழியாக வடக்கு நோக்கி இழுக்கப்படுவதால் மழை பெய்கிறது.

காற்று  எப்படி செல்கிறது:
மேலடுக்கில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று செல்வதால்தான் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையை கணிக்க முடியாது. ஏனென்றால் காற்று எப்போது வீசும் என்பதை கணிக்கவே முடியாது. அதிகாலையில் வீசும் காற்று மறுநாள் மழையாக மாறும். இதை முன்பே கணிப்பது கஷ்டம்.

அப்போ சாட்டிலைட் பயன்பாடு தான் என்ன

இதில் நாம் சாட்டிலைட் புகைப்படங்களையும் கணிக்க முடியாது. சாட்டிலைட் புகைப்படங்கள் காற்று காரணமாக நொடிக்கு நெடி மாறும். இதனால் மழை பெய்ய போவதை தகுந்த காலநிலை பொருத்தது. அதனால் நாம் முன் கூட்டியே கணிக்க முடியாது, என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழிநுட்பங்கள் வந்தும்கூட ரமணன் அவர்கள் அறிவித்துள்ள பேட்டியானது மக்களிடையே நம்பிக்கை இழக்க செய்கிறது…. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு முறைகளில் கருத்துகளையும் மீமஸ்களையும் பதிந்துள்ளனர்.
அதில் ஒன்றுதான் சாமி சொல்றவன் கூட மழை வருவதை சரியா சொல்லிட்டான்
சாட்லைட் வச்சிட்டு என்னத்த பண்றாகளோ என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version