Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்து!! 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி!!

#image_title

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்தில் ஓட்டுநர் , நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் முன்னே சென்ற லாரியும் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் பகுதியில் வரும் பொழுது ஒன்றை ஒன்று முந்த முயன்ற முயன்றுள்ளதாக தெரிகிறது.

அதில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன இதில் இரு வாகனங்களின் முகப்பு பகுதிகள் நொருங்கிய அப்பளம் போல் காட்சியளித்தது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் சத்திரக்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

மேலும் பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் சிலருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த கேணிக்கரை போலீசார் போக்குவரத்தை சீர் செய்து காயம் பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version