Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் சர்மா ஒலி புத்தி கெட்டவர்’ அவர் நேபாளியே கிடையாது! ராமர் பற்றி ஒன்னுமே தெரியாது! வலுக்கும் எதிர்ப்பு

அயோத்தி நேபாளத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நேபாள பிரதமர் சீனாவுடன் கைகோர்த்து இதுபோன்ற கருத்துகளை கூறி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக உத்தரகண்ட் பகுதிகளை இணைத்தது போல் வரைபடத்தை வெளியிட்டார். எல்லையில் ராணுவத்தை குவித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.

 

இதேபோல் இந்தியர்களுக்கு மதரீதியான சிக்கலையும் நேபாள பிரதமர் ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் பேசியதாவது; ராமர் ஒரு நேபாளி, அவர் பிறந்த அயோத்தி கூட நேபாளில்தான் உள்ளது. இந்தியா போலியான அயோத்தியை உருவாக்கி வைத்துள்ளதாக மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை அயோத்தியில் உள்ள இந்து தலைவர்கள் கண்டித்ததோடு நேபாளத்தில் விரைவில் ஆட்சி கவிழும் என்றும் சாபம்விட்டனர்.

 

இதுகுறித்து மஹந்த் பரஹம்ச ஆச்சாரியார் கூறுகையில், பிரதமர் சர்மா ஒலியே நேபாளி கிடையாது அந்நாட்டின் வரலாறு அவருக்கு சுத்தமாக தெரியாது. 24 நேபாள கிராமங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதனை மறைத்தி நேபாளத்தை வஞ்சித்து வருபவர், அவருக்கு எதிராக நேபாளத்தில் மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், அவர் ஒரு புத்தி கெட்டவர் என்றும் கூறினார். நேபாள பிரதமருக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Exit mobile version