Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

“கரகாட்டகாரன் பார்ட் 2 வேண்டாம் என சொல்லிவிட்டேன்…” நடிகர் ராமராஜன் பேச்சு!

நடிகர் ராமராஜன் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாமானியன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்து, இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருப்பவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர் அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் 10 ஆண்டுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில அவரோடு ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் ரகேஸ் இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பல விஷயங்களை ராமராஜன் பேசினார்.

அப்போது சமீபகாலமாக வைரலாகி வரும் பார்ட் 2 ட்ரண்ட் பற்றி பேசினார். அப்போது “ஒரு படம் என்பது ஒரு குழந்தை போல. இரண்டாவது குழந்தை பிறந்தால் பார்ட் 2 எனப் பெயர் வைப்போமா?… இயக்குனர் கங்கை அமரன் அண்ணன் கூட கரகாட்டக்காரன் 2 எடுப்போம் என்றார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பேசிய இயக்குனர் கங்கை அமரன் கரகாட்டகாரன் 2 எடுக்க இருப்பதாகவும், அதில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் அனைவரையும் நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version