Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இராமசாமி படையாச்சிக்கு மணிமண்டபம்! அழைப்பிதழை இராமதாஸிடம் வழங்கினார்கள் அமைச்சர்கள்

இராமசாமி படையாச்சிக்கு மணிமண்டபம்! அழைப்பிதழை இராமதாஸிடம் வழங்கினார்கள் அமைச்சர்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் வன்னியர் சமுதாயத்தின் முக்கிய தலைவரும் சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான மறைந்த இராமசாமி படையாச்சி அவர்களுக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்று பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் சி.வீ.சண்முகம், MC.சம்பத் ஆகியோர் இராமசாமி படையாச்சி மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு மணிமண்டபம் அழைப்பிதழை கொடுத்தனர். அழைப்பிதழை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார் இராமதாஸ். அமைச்சர்களுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version