ராமேஸ்வரம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மீனவப்பெண்!

0
169

நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றம் உழைப்பவர்களை தண்டிக்கும் வகையில் பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

செயல்பாட்டிலிருக்கும் சில சட்டதிட்டங்களும் குற்றவாளிகளுக்கு போதுமான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் மீண்டும், மீண்டும், நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது.

ஏதோ பெயருக்கு ஒருவர் அது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு விட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்குகிறோம் என்ற பெயரில் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது.

நீதிமன்றமும் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை என்ற பெயரில் ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை வழங்குகிறது.

ஆனால் அவர்கள் மீண்டும் தண்டனையிலிருந்து விடுபட்டு வந்து முன்பு செய்த அதே தவறை தான் மீண்டும், மீண்டும், செய்கிறார்கள்.

அந்தவகையில் ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள்.

மீனவ பெண்கள் அந்தப் பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து வைத்து அதனை விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்தவிதத்தில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல் பாசியை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார்.

அப்போது அந்த பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்திராவை கேலி செய்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய அந்த கும்பல் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு கொலையை மறைக்கும் நோக்கத்தில் அந்த பெண்ணின் முகத்தை தீ வைத்து எரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

வீட்டில் இருந்து சென்ற சந்திரா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்கள்.

முதலில் சந்தேகத்தினடிப்படையில் 6 வடமாநிலத்தவர்கள் உள்ளிட்டோரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்தார்கள். அப்போது ஆத்திரத்தின் மிகுதியில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் அந்தப் பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினார்கள்.

இதற்குப் பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், விசாரணையின் முடிவில் தான் 6 வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் குற்றவாளிகளா? அல்லது குற்றமற்றவர்களா? என்று தெரியவரும் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.