Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் திலகம் வீடு ஜப்தி செய்யப்படுமா?.. ராம்குமார் சொல்வது என்ன?…

ramkumar

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். இவரின் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன். துஷ்யந்தும், அவரின் மனைவி அபிராமி இருவரும் பங்குதாரார்களாக உள்ள ஈசன் புரடெக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்கிற படம் தயாரிக்கப்பட்டது. இதில், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்தனர்.

இந்த படத்தை தயாரிக்கும்போது தன்பாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்திட்சம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை. வட்டியோடு சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை கட்ட வேண்டும் மற்றும் படத்தின் எல்லா உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திஸ்தர் 2024ம் வருடம் மேம் மாதம் உத்தரவிட்டார்.

ஆனால், போதிய அவகாசம் கொடுத்தும் துஷ்யந்த் தரப்பு இதை செய்யவில்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில்தான் சிவாஜி கணேசனின் விட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரைவிட்டது. இந்த செய்திதான் நேற்று வெளியாகி சிவாஜி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதாவது, சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீடு என்னுடைய பெயரில் இல்லை. அது என் சகோதரர் பிரபு பெயரில் இருக்கிறது. எனவே, ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது. மேலும், இது தொடர்பாக மனுத்தக்கல் செய்யவிருப்பதாகவும் நீதிபதியிடம் கூறப்பட்டது. இதையடுத்து ‘வீட்டின் உரிமையாளராக துஷ்யந்த் இல்லாத போது எப்படி ஜப்தி செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரி பதில் மனுவை தாக்கல் செய்யும் படியும் உத்தரவிட்டார்.

Exit mobile version