‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு!

0
254
#image_title

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் முறையை அமல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்ச்சித்து வருகிறது.

நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த குழு கிட்டத்தட்ட 191 நாட்களாக பல்வேறு கட்டமாக அரசியல் கட்சி தலைவர்கள், சட்ட வல்லுனர்கள், பொதுமக்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கலந்து ஆலோசித்தது.

வருகின்ற 2029 ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒன்றாக நடத்த இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தப்பட மாற்றப்பட மற்றும் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து பரிசீலனை செய்துள்ளது.

இந்த உயர்மட்ட குழு ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்து 18 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையை இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவிடம் சமர்பித்துள்ளனர்.

விரைவில் மத்திய சட்ட அமைச்சகத்திடமும் இந்த அறிக்கையை சமர்பிக்கவுள்ளது குறிப்பிடதக்கது.