Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Ranakalli Ilai: கட்டிப்போட்டால் குட்டி போடும்… கிட்னியில் உள்ள கல்லை நீக்க இந்த ஒரு செடி போதும்..!!

Ranakalli Ilai

Ranakalli Ilai: தற்போது இருக்கும் நவீன காலத்தில் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஏதோ ஒரு நோய் உடம்பில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம் நம்முடைய உணவு பழக்க வழக்கமும் ஒன்று.

தற்போதைய காலக்கட்டத்தில் சிறுநீரகத்தில் கல் உள்ள பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்து வந்தாலும், சிலருக்கு அது குணமடைவது என்பதே இல்லை. சிறுநீரகத்தில் உள்ள கல்லை குணப்படுத்துவதற்கு சிறந்த மூலிகையை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். மேலும் இந்த மூலிகை பல வியாதிகளுக்கு மருந்தாக உள்ளதை பற்றியும் (ranakalli plant uses in tamil) பார்ப்போம்.

ரணகள்ளி

ரணகள்ளி செடியை கட்டிப்போட்டால் குட்டிப்போடும் என்று கூறுவார்கள். காரணம் என்னவென்றால் இந்த செடியின் இலையை பறித்து எந்த ஒரு பதியமும் இல்லாமல் மண்ணில் போட்டால் குறைந்தப்பட்சம் 5 நாட்களில் துளிர் விட்டு முளைக்க அரம்பிக்கும். Bryophyllum Pinnatum, life plant, miracle leaf என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

மருத்து பயன்கள்

ரணகள்ளி இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்கும். இந்த ரணக்கள்ளி இலை 1 அல்லது 2 எடுத்து வெறும் வயிற்றில் மென்று தின்ன வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தாெடர்ந்து சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்கும்.

மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையை சாப்பிட்டு வந்தாலும் அவர்களுக்கு அதிகப்படியான தாகம் குறையும். மேலும் இரத்தத்தில் சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

மேலும் இந்த இலையை அரைத்து காயங்கள் உள்ள இடத்தில் தடவி வர காயங்கள் விரைவில் குணமடையும்.

கொதிக்க வைத்து கசாயம் செய்து குடித்து வர சிறுநீரக சம்பந்தமான எந்த நோயும் ஏற்படாது. மேலும் இந்த இலை சுவைப்பதற்கு சற்று துவர்ப்பாக இருக்கும்.

இந்த இலையை சாப்பிட்ட பிறகு பால், தயிர், இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க: ஆண், பெண் மலட்டுத்தன்மை போக்கும் ஆலம் பழத்தின் மருத்துவ பயன்கள்..!!

Exit mobile version