நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் பொதுக்குழு நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லையென்று அறிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாகிய சசிகலா அதிமுக தொண்டர்களை என் பக்கம் தான் உள்ளார்கள் என்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பின் சசிகலா பல்வேறு இடங்களுக்குச் சென்று இதுதான் சமயம் என்று தன் ஆதரவை திரட்டி வருகிறார்.
இதன் படி நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சசிகலா தன் தொண்டர்களை சந்திக்க சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அந்நிலையில் சசிகலாவின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் மலர் தூவி அவரை வரவேற்றனர். பின்னர் தொண்டர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒரு சில நபரின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னத்திற்கு பிளவு ஏற்பட்டு வருகிறது. பின் ஏதாவது செய்து அவர்களை உயர்த்துவதற்காக சில அடிமட்ட தொண்டர்களை தன் வசம் ஈர்த்து வருகின்றனர். இது அதிமுக தொண்டர்களுக்கு இழைக்கும் ஒரு மிகப்பெரிய துரோகம் ஆகும்.
ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்கள் சுய விருப்பத்திற்காகவும் கடமைக்கேற்ற பதவிகளை மாற்றுவதற்காகவும் இவை விளையாட்டு செயல் அல்ல. இப்படிப்பட்ட ஒரு அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது.?
இரட்டை இலக்கே சூனியம் வைத்து விட்டீர்களா? இச்செயலை செய்பவர்களை எம்ஜிஆர் அவர்களும் அம்மாவாகிய ஜெயலலிதா அவர்களும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கியவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? ஆண்டுக்கு ஒவ்வொரு முறையும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்களை மாற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இதனைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் செய்யும் செயலை பார்த்து திமுகவினர் ஆணவத்தோடு கைத்தட்டியும் மனதிலும் சிரித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப அதிமுகவினரும் நடந்து கொள்கின்றார்கள். என்னதான் திமுகவினர் சதி செய்து அதிமுக கட்சியினை உடைத்தாலும் கொஞ்சம் கூட அசையாமல் உலகில் நிலைத்து நிற்கும்.அதற்கான காலம் விரைவில் வரக்கூடும்.
எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவினருக்கு நாமே இடம் கொடுக்கக் கூடாது. என்றுதான் நான் மிகவும் பொறுமையாக காத்திருக்கிறேன். அனைவருக்கும் ஒன்றை மட்டும் வற்புறுத்தி சொல்லிக் கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இச் சமூகத்தில் மக்களுக்காகவே மக்களின் ஒருவனுக்காக வாழ வேண்டும் என்று எண்ணத்தில் இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.